2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை

Gavitha   / 2016 மார்ச் 25 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் இடம்பெறும் கொள்ளைகளையும் சட்ட விரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.ரசிக சம்பத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்  உபாலி ஜயசிங்க மற்றும் களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் சிசிரபெத்ததந்திரி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

'வெல்லாவெளி பிரதேசத்தில் நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தடுக்கும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பொலிஸார் சிவில் உடையில் வெல்லாவெளி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்' என்று அவர் கூறினார்.

'பொதுமக்கள் பொலிஸாருக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமே சட்ட விரோத செயற்பாடுகள் மற்றும் கொள்ளைகளை தடுத்து,குற்றவாளிகளை கைதுசெய்யமுடியும்.

அண்மையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, மூவர் கொண்ட கொள்ளையர்கள் குழுவினர் கைது செய்யப்பட்டனர். இது போன்று எதிர்காலத்திலும் பொதுமக்கள் பொலிஸாருடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தமுடியும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .