Administrator / 2015 பெப்ரவரி 18 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் 22 வயதான யுவதியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழருக்கு ஐந்தரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிதக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை நிறைவடைந்ததன் பின்னர் அவரை இலங்கைக்கு நாடு கடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டேசன் ரோட், போட்ஸ்லேட் என்ற இடத்தில் வசித்த 35 வயதான நரேந்திரன் பிரபாகரன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரவு கேளிக்கை விடுதியில் வைத்து குறித்த யுவதியை, சந்தேகநபர் சந்தித்துள்ளார். அதிகமாக மது அருந்திய குறித்த யுவதி சுயநினைவு இழந்ததையடுத்து சந்தேகநபர், அந்த கேளிக்கைவிடுதியின் மேல்மாடிக்கு யுவதியை அழைத்துசென்று இக்குற்றத்தை புரிந்துள்ளார் என்று தெரியவருகின்றது.
எனினும், யுவதியின் விருப்பத்துடனேயே தான் அவருடன் உறவை வைத்துகொண்டதாக சந்தேநபர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026