Kanagaraj / 2015 மார்ச் 03 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலைய பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் மீது இனந்தெரியாத இருவர் விமானநிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர்.
சம்வத்தில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரத்தொழுகமையை சேர்ந்த கே.ஏ.டி. பெர்னாந்து என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கட்டுநாயக்க விமானநிலையத்தில் இடம்பெறும் முறைகேடுகள், ஊழல்கள் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு தகவல் வழங்கினேன் என்றே இரண்டு பேர் என்னை தாக்கினர். சம்பவம் தொடர்பாக விமான நிலைய பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளேன் என்றார்.
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026