Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 21 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்பிள் நிறுவனத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இசைச் சேவையான அப்பிள் மியூசிக்கில் 6.5 மில்லியனுக்கு அதிகமான கட்டணம் செலுத்தப்பட்ட பயனர்கள் தற்போது காணப்படுவதாக அப்பிளின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக், திங்கட்கிழமை (19) தெரிவித்துள்ளார்.
தவிர, அப்பிள் மியூசிக் சேவையின் இலவச சோதனையில் 8.5 மில்லியன் பேர் பங்குபற்றியதாகவும், அந்தவகையில் மொத்தமாக தற்போது 15 மில்லியன் பேர் காணப்படுவதாக அப்பிள் மியூசிக்கின் வெற்றிகரமான ஆரம்பத்தினை பற்றி தொழில்நுட்ப நிகழ்வொன்றில் உரையாற்றிய டிம் குக் தெரிவித்தார்.
தான் இது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், இதன் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என்று தான் நினைக்கிறேன் என்று குக் மேலும் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் இசைச் சேவைகளில் iTunes மூலமாக ஆதிக்கம் செலுத்தும் முகமாக கடந்த ஜூன் மாதத்தில் அப்பிளானது அப்பிள் மியூசிக்கை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்தச் சேவையினை பரீட்சார்த்தமாக 90 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்த தனது பயனர்களுக்கு அப்பிள் அனுமதியளித்திருந்தது. இந்தவகையில், இலவசமாக இந்தச் சேவையை பயன்படுத்திய முதற்கட்ட பயனர்களுக்கு இந்த மாத ஆரம்பத்தில் இந்த இலவச சேவை இல்லாமற் போயிருந்தது.
49 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
4 hours ago