Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 23 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்சுங்கானது தனது புதிய S7, S7 Edge திறன்பேசிகளை, ஸ்பெயினின் பார்சிலோனாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான மொபைல் வேள்ட் கொங்கிரஸில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Galaxy வரிசையில் அமைந்த, மேற்படி புதிய திறன்பேசிகள், முன்னைய Galaxy S6ஐ விட சிறிது தடிப்பாக உள்ளன. ஏனெனில், புதிய திறன்பேசிகள், பெரிய மின்கலங்களைக் கொண்டமைந்துள்ளது. தவிர, தனது வெற்றிகரமான பழைய முறைமைக்குச் சென்றுள்ள சம்சுங், நீர் புக முடியாதபடியும் microSD cardஐ உள்ளடங்குகின்ற வகையிலும் புதிய திறன்பேசிகளை வடிவமைத்துள்ளது. மேற்கூறப்பட்ட இரண்டு வசதிகளும் S6இல் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய S7, S7 edgeஇனது திரைகளானவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும் S6 மாதிரிகள் போன்று 5.1 அங்குல திரையைக் கொண்டிருக்கவில்லை. S7 edge ஆனது அதே Quad HD resolutionஐ கொண்டிருக்கின்ற போதும், இதன் வளைந்த திரையானது 5.1 அங்குலத்திலிருந்து 5.5 அனுகூலமான அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, S7இன் மின்கலமானது, முன்னைய S6 கொண்டிருந்த 2,550mAhஇலிருந்து 3,000mAh ஆக அதிகரிக்கப்பட்டதுடன் S7 edgeஇன் மின்கலமானது, முன்னைய S6 edgeஇன் 2,600mAHஇலிருந்து 3,600mAH ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின்கலங்களின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், S7 ஆனது 7.9 மில்லிமீற்றர் தடிப்பாகவும் 152 கிராம் எடை கொண்டதாகவும் அமைந்துள்ளது. இது, S6இன் தடிப்பை விட 1.1 மில்லிமீற்றர் 14 கிராம் எடை கூடியதாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில், S7 edgeஇனது எடையானது, S6 edgeஇனது எடையை விட 20 சதவீதம் அதிகரித்து 157 கிராமாக உள்ளது.
இதேவேளை, S7, S7 edge ஆகிய இரண்டு திறன்பேசிகளும் 32GBயை கொண்டமைந்ததுடன் மேலதிகமாக 200GB வரை நினைவகத்தை நீடிக்கக்கூடிய வகையிலும் இரண்டு சிம்களை பயன்படுத்தக்கூடிய வகையிலும் உள்ளது.
இதேவேளை, புதிய S7 வரிசையில் சம்சங்கானது புதிய புகைப்பட உணரியையும் வில்லையையும் உள்ளடக்கியுள்ளது. எனினும் S6இல் இருந்த 16MP கமெரா அல்லாது இம்முறை 12MP கமெராவே வரவுள்ளது. புதிய F1.7 வில்லையின் மூலம், முன்னைய திறன்பேசிகளை விட 95 சதவீதமான ஒளியை மேற்படி கமெரா பெறவுள்ளது.
34 minute ago
41 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
41 minute ago
46 minute ago
2 hours ago