Janu / 2026 பெப்ரவரி 09 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நடைபெற்று வரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் சில போட்டிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (08) அன்று மாலை இலங்கைக்கு வந்தடைந்தது.
கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 30 பேர் கொண்ட இந்த குழுவினர், இந்தியாவின் மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-1144 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கினர்.
அமெரிக்க அணியின் முதலாவது போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இரவு நேரப் போட்டிகளை நடத்துவதற்காக நவீன மின் விளக்கமைப்பு பொருத்தப்பட்டதன் பின்னர், அங்கு நடைபெறும் முதலாவது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
டி.கே.ஜி.கபில

4 minute ago
17 minute ago
19 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
19 minute ago
56 minute ago