Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை
Janu / 2024 ஜூலை 25 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் மெப்ஸை நேரடியாக வெப் பிரவுசரில் பயன்படுத்தும் வகையில் பொது பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளது. இது பீட்டா வெர்ஷன் என்பதுடன் இது கூகுள் மேப்ஸுக்கு நேரடி சவாலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பீட்டா பதிப்பை பயனர்கள் கூகுள் க்ரோம் மற்றும் ஆப்பிளின் சஃபாரி பிரவுசரில் நேரடியாக பயன்படுத்தலாம். இதனை இப்போதைக்கு ஆங்கில மொழியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என பிளாக் பதிவில் ஆப்பிள் தெரிவித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் இதனை பயன்படுத்த முடியும்.
இதற்கு முன்பு வரை தேர்ட் பார்ட்டி செயலியை கொண்டு மட்டுமே ஆப்பிள் மெப்ஸை வெப்பில் பயனர்கள் பயன்படுத்தும் நிலை இருந்தது. தற்போது ஆப்பிள் நிறுவனமே அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. beta.maps.apple.com என்ற தளத்தில் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். இது ஆப்பிள் மெப்ஸ் சார்ந்த ரீச்சுக்கு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
டிரைவிங் மற்றும் வாக்கிங் டைரெக்ஷன் சார்ந்த தகவல், ரேட்டிங்ஸ் மற்றும் ரிவ்யூஸ், ஒரு இடத்தை குறித்த தகவல் போன்றவற்றை இதில் இப்போது பெற முடியும்.
வரும் நாட்களில் மேலும் பல அம்சங்கள் அறிமுகமாகும் என தெரிகிறது. இது பீட்டா வெர்ஷன் என்பதால் பயன்பாடு சார்ந்து சில சிக்கல்களும் உள்ளது. இதை நாம் பயன்படுத்தி பார்த்த போது அறிந்து கொள்ள முடிந்தது.
பல ஆண்டுகளாக மேப் சார்ந்த நேவிகேஷன் சந்தையில் கூகுள் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது ஆப்பிளின் வருகை அதற்கு சவால் அளிக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago