2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

இன்ஸ்டாகிராமில் லைவ் லொகேஷன்

Editorial   / 2024 நவம்பர் 26 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாட்ஸ்அப் மெசஞ்சரில் இருப்பது போலவே இன்ஸ்டாகிராமிலும் பயனர்கள் தங்களது லைவ் லொகேஷனை பகிரும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா.

மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. இன்று உலக அளவில் மாதந்தோறும் பில்லியன் கணக்கான ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தகவல். இந்த தளத்தில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்திற்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இன்ஸ்டாவில் இப்போது லைவ் லொகேஷனை பகிரும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் டைரக்ட் மெசேஜ்களின் வழியாக தங்களது இருப்பிடத்தை பகிரலாம். அதிகபட்சம் 60 நிமிடங்கள் வரை இந்த லைவ் லொகேஷன் ஆக்டிவாக இருக்கும். வாட்ஸ்அப்பில் 8 மணி நேரம் வரையில் லைவ் லொகேஷன் ஆக்டிவாக இருக்கும் வகையில் பகிர முடியும்.

 

இதை ஒருவருக்கு ஒருவர், குரூப்களுக்கு பகிர முடியும். இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்ய முடியாது. இது தொடர்பான இண்டிகேட்டர் ஒன்றும் சம்பந்தப்பட்ட சாட் பாக்ஸில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு இந்த அம்சம் சில நாடுகளில் மட்டுமே பயனர்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என மெட்டா தெரிவித்துள்ளது. இன்ஸ்டா பயனர்கள் தங்கள் பெயர்களை டைரக்ட் மெசேஜ்களில் மாற்றி வைக்கும் அம்சம் மற்றும் 17 ஸ்டிக்கர் போக்குகளையும் மெட்டா அறிமுகம் செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .