Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 25 , மு.ப. 02:15 - 1 - {{hitsCtrl.values.hits}}
கடவுச்சொல்லை தட்டச்சு செய்யாமல் உங்களின் கூகிள் கணக்கினுள் உள்நுழையும் புதிய வழிமுறையை சோதனை செய்வதாக, கடந்த செவ்வாய்க்கிழமை (22), கூகிள் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய வழிமுறையின் மூலம், உங்கள் திறன்பேசிக்கு அனுப்பப்படும் ஒரு அறிவிப்புக்கு பதிலளிப்பதன் மூலம் அங்கிகரிக்கப்பட்டு உள்நுழையும் முறையிலேயே சோதனை இடம்பெற்றதாக, இந்தச் சோதனையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி முறைமையானது, அண்மையில் யாகூவால் அறிமுகப்படுத்தப்பட்ட Account Keyயை ஒத்ததாகவே காணப்படுகிறது. இந்த முறைமையின் மூலமும் கடவுச்சொல் இல்லாமல், உங்களது அலைபேசிக்கு அனுப்பப்படும் அறிவித்தலின் மூலம் ஒரு செயலிக்குச் சென்று, அங்கு உங்கள் உள்நுழைவானது அங்கிகரிக்கப்படும்.
பயனர்களின் கணக்குகளினுடைய பாதுகாப்பு என்று வருகின்ற நிலையில், பொதுவாக கடவுச்சொற்களே பலவீனமான இணைப்பாக காணப்படுகிறது. பல பயனர்கள், பெரிய (Capital), சிறிய (Small), இலக்கங்கள், அடையாளங்கள் (Symbols) உள்ளடங்கிய உறுதியான கடவுச்சொல்லை பயன்படுத்துவதில்லை என்பதுடன் பல வகையான கணக்குகளிலும் ஒரே கடவுச்சொல்லையே பயன்படுத்துகின்றனர்.
தற்போது காணப்படுகின்ற Two-factor authentication மூலம், உங்களது அலைபேசிக்கு அனுப்பப்படும் குறியீட்டை பதிவு செய்வதன் மூலம் கணக்கில் நுழையக் கூடியதாக உள்ளமை அதிக பாதுகாப்பை வழங்குகின்றது. எனினும் உள்நுழையும் படிமுறையில் மேலதிகமாக ஒரு படிமுறை இருப்பதால், இந்த முறைமையினை பல பயனர்கள், தொந்தரவாக கருதுகின்றனர்.
புதிய கடவுச்சொல் இல்லாத முறையிலான கூகிள் கணக்கின் உள்நுழைவின் போது, நீங்கள், உங்களது மின்னஞ்சல் முகவரியை மாத்திரம் தட்டச்சு செய்தால் போதும், அதன்பின், உங்கள் அலைபேசியில் தோன்றும் அறிவுறுத்தலானது, நீங்கள் இன்னொரு சாதனத்தின் மூலம் உள்நுழைய முயற்சிக்கின்றீர்களா எனக் கேட்கும், அப்போது ஆம் என அங்கிகரித்தால் நீங்கள் உங்கள் கணக்கில் உள்நுழையலாம். இந்தப் புதிய முறையானது உள்நுழைதல்களை வேகமாக்குகிறது.
இந்த முறையானது, வேறு சாதனங்களின் மூலம் கூகிளின் சேவைகளைப் பயன்படுத்தும்போது, தமது அலைபேசியை அருகில் வைத்திருப்பவர்களுக்கே மிகவும் உதவியாக அமையவுள்ளது.
மேற்படி கடவுச்சொல் இல்லாத உள்நுழையும் முறையானது, மிகக் குறைவான பயனர்களிடையே சோதனை செய்யப்பட்டுள்ளது. எப்போது இந்தச் சேவையானது ஏனையவர்களுக்கு சோதனைக்கு விடப்படும் என்றும் எப்போது போது வெளிக்கு பாவனைக்கு வரும் என்றோ கூகிள் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.
3 hours ago
4 hours ago
4 hours ago
Babu Wednesday, 20 February 2019 06:22 AM
Rummy circle
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago