2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கூகிள் கிளாஸ் கணக்குகள் நிறுத்தம்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 27 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்பபெட் தாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகிளானது, நான்கு வருடங்களுக்கு முன்னர் கூகிள் கிளாசை அறிமுகப்படுத்தியிருந்தநிலையில், தற்போது, கூகிள் கிளாசின் சமூகவலைத்தள கணக்குகள் சிலவற்றை மூடியதுடன், நுகர்வோரிடையே விலை கூடிய மேற்படி கூகிள் கிளாசை பிரபலப்படுத்தும் நடவடிக்கையும் நிறுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமையே (26), கூகிள் கிளாசின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள், இயங்கு நிலையில் இல்லை என்பது அவதானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கூகிள் கிளாசின் கூகிள் பிளஸ் பக்கத்தில், இப்பக்கத்தின் மூலம் தொடர்ந்தும் பயனர்களுடன் தொடர்பில் இருப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏனைய சமூகவலைத்தள கணக்குகள் ஏன் நிறுத்தப்பட்டது என அந்நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.

கடந்த வருடம், நுகர்வோர்களுக்கு கூகிள் கிளாசை விற்பனை செய்வதை கூகிள் நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி கூகிள் கிளாஸ் ஒன்றின் விலை, 1,500 அமெரிக்க டொலர்கள் ஆகும். 2012இல் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்படி கூகிள் கிளாஸ் மூலம் மின்னஞ்சல்களை பார்வையிடக்கூடிய வகையில் இருந்ததுடன், காணொளிகளை பார்வையிடக்கூடிய வசதி இருந்ததுடன், அதிலிருந்து சிறிய கமெரா மூலம் காணொளிகளை பதிவு செய்யக்கூடிய வகையிலும் இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X