Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
விண்வெளியில் சிக்கித்தவித்துவரும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் ஆகியோருக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திய வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் திகதி விண்வெளிக்கு சென்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு பணிகளை முடித்து கொண்டு கடந்த 13ஆம் திகதி திரும்பும் வகையில் பயணத்திட்டம் வரையறுக்கப்பட்டிருந்தது.
ஆனால் சில தொழில் நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்பும் பயணம் ஒத்திவைக்கபட்டது. தொடர்ந்து 26ஆம் திகதி அவர்கள் பயணித்த ஸ்டார் லைன் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியவில்லை.
இதனால் தற்போதும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. சரியாக 7 நாட்களுக்கு விண்வெளி மையத்தில் தங்கி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திட்டம் 50 நாட்களை கடந்துள்ளது.
இருவரையும் மீண்டும் பூமிக்கு அழைத்துவர நாசா முயற்சித்து வருகிறது. இந்நிலையில் விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்தாலும் இருவரும் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாததால் இயல்பாகவே உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். இப்படி இருக்க அதிக நாட்களுக்கு விண்வெளியில் இருப்பது உடலில் பல மாற்றங்களுக்கு வழி வகுக்கின்றன. புவி ஈர்ப்பு விசை இல்லாததன் காரணமாக உடலின் தசை நார்கள் மற்றும் எலும்புகள் விரைவில் வலுவிழக்கின்றன.
விண்வெளியில் இருப்பவர்கள் எடையை உணராததால் உடலை சுமந்து இயக்கும் எலும்புகளின் செயல்பாடு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால் கடுமையான விளைவுகள் ஏற்படும். விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் முறையான பயிற்சிகளுக்கு பிறகே அனுப்பிவைக்கப்படுகின்றனர். அதற்கேற்றபடி உடற்பயிற்சிகள் செய்தாலும் எலும்பில் ஏற்படும் இந்த பிரச்சினை எலும்பு முறிவுக்கே வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
அதே போல் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் மேலும் புவி ஈர்ப்பு விசை இல்லாததால் சிறுநீரகத்தில் கல்சியம் அளவு அதிகரித்து சிறுநீரக கற்கள் உண்டாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
மேலும் புற்றுநோய் வருவதற்கான பல சாத்திய கூறுகள் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். உடல் ரீதியாக ஏற்படும் இந்த மாற்றங்களை புரிந்து கொள்வது சந்திக்கும் சவால்களை கையாள உதவும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக இந்த விண்கலம் எங்களை பூமிக்கு கொண்டு சேர்க்கும் என்பதை நான் நம்புகிறேன். எந்த பிரச்சினையும் இல்லை என்ற நல்ல உணர்வு என் இதயத்தில் இருக்கிறது என்று சுனிதா கூறியது குறிப்பிடத்தக்கது.S
47 minute ago
48 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
48 minute ago
54 minute ago
1 hours ago