Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேஸ்புக் நிறுவுநரும் அதன் பிரதம நிறைவேற்றதிகாரியுமான மார்க் ஸக்கர்பேர்க்கின் மனைவி பிறிஸ்ஸிலா சானுக்கு மூன்று தடவைகள் கரு தங்கியிருக்காத நிலையில், கடந்த வாரம் மக்ஸ் என்ற அவர்களின் முதலாவது குழந்தையை சுகமாகப் பெற்றெடுத்துள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை (01) ஸக்கர்பேர்க் அறிவித்தார்.
இந்நிலையில், தனது மகளுக்கு தானும் தனது மனைவியும் எழுதியுள்ள கடிதத்தில் மனித ஆற்றலை முன்னேற்றவும் அடுத்த தலைமுறையில் உள்ள அனைத்து சிறுவர்களையும் சமமாக பேணுவதை முன்னேற்ற ஆரம்பிக்கப்பட்டுள்ள சான் ஸக்கர்பேர்க் முன்னெடுப்பினை அடைவதற்கு தனதும், தனது மனைவி பிறிஸ்ஸிலா சானினது பேஸ்புக் பங்குகளின் 99 சதவீதமானவற்றை (தற்போதைய பெறுமதியின் படி 45 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப் போவதாக ஸக்க்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.
மேற்படித் திட்டத்தின் படி, பிரதான இலக்குகளாக தனிப்பட்ட கற்றல், நோய்களைக் குணமாக்கல், மக்களை இணைத்தல், வலுவான சமூகங்களை கட்டமைத்தல் என்பன காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
23 minute ago
48 minute ago