2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

நாக்கிற்கு உப்பின் சுவையை கொடுக்கும் மின்சார கரண்டி

Freelancer   / 2024 மே 22 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவில் உப்பு சேர்க்காமல், நாக்கிற்கு உப்பின் சுவையை கொடுக்கும் வகையில் மின்சார கரண்டி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று.

உணவில் உப்பின் அளவு குறைந்தால் சுவையும் போய்விடும். அதிகமானால், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினை, பக்கவாதம் போன்ற பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்து விடும். இப்படி உப்பினால் எழும் பிரச்சினைகள் ஏராளம்.

ஆனால், இந்த கவலைகெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே புது கண்டிபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர் ஜப்பானியர்கள். புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கு பெயர்போன ஜப்பானியர்கள், இம்முறை எலெட்க்ரிக் ஸ்பூன் ஒன்றை அறிமுகம் செய்து அசத்தியுள்ளனர்.

இந்த பிரேத்யேக ஸ்பூனை கண்டுபிடித்துள்ளது ஜப்பானின் பானங்கள் தயாரிக்கும் நிறுவனமான, கிரின் என்ற நிறுவனம். இந்த ஸ்பூனில் உணவை எடுத்து, நாவில் வைக்கும்போது, நாவில் சிறிய அளவு மின்னூட்டம் பாய்ச்சப்பட்டு அதன் மூலம் நாக்கில் உள்ள சுவை அரும்புகளில் உள்ள சோடியம் அயனிகள் செறிவூட்டப்பட்டு, நாக்கிற்கு ஏற்றார்போல உப்பு சுவை கிடைத்து விடும்.

இதனால், உணவில் உப்பு சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை. இதன்மூலம் ஆரோக்கியமான உணவு முறையை கையாள முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்பூனானது, பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 கிராம் எடை கொண்ட மின்சார ஸ்பூனானது சார்ஜ் செய்து கொள்ளும் வகையில், லித்தியம் பேட்டரி மூலம் இயங்குகிறது.

முதற்கட்டமாக 200 ஸ்பூன்கள் விற்பனைக்கு வரும் என்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .