Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணைய பாரபட்சமின்மை சார்பாக, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக, Free Basics இணையை சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கின் மேற்படிச் சேவையின் மூலம், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான இணையத்தளங்களுக்கு இலவசமாக செல்லும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் இணைய சேவை வழங்குநர்கள், மற்றைய சேவைகளைக் காட்டிலும் ஒன்றை முதன்மைப்படுத்தக்கூடாது என இணைய பாரபட்சமின்மையை ஆர்வலர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
மேற்படி இலவச சேவைகளில், பேஸ்புக், தேர்ந்தெடுக்கப்பட்ட சில உள்ளூர் செய்திகள், வானிலை எதிர்வுகூறல்கள், பி.பி.சி, விக்கிபீடியா, சில சுகாதார இணையத்தளங்கள் என்பன உள்ளடங்கியிருந்தன.
இந்நிலையிலேயே, உள்ளடக்கத்தின் அடிப்படையில் இணைய சேவையை, எந்தவொரு இணையசேவை வழங்குநரும் பாகுபடுத்தி வழங்கக்கூடாது என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஏதாவது இணைய உள்ளடக்கங்கள், மற்றையவற்றை விட முன்னிலைப்படுத்தப்படுகின்றனவா அல்லது ஏனையவை இலவசம் இல்லாதபோது ஏதாவது இலவசமாக வழங்கப்படுகின்றனவா என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், Free Basicsஐ சட்ட ரீதியாக்குவதற்காக பணியாற்றப்போவதாக பேஸ்புக்கின் நிறுவுநரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான மார்க் ஸக்கர்பேர்க் தெரிவித்துள்ளார். இதேவேளை, முழு இணையத்தையும் இலவசமாக வழங்கினால், தம்மை தக்கமுடியாது என்ற கருத்தை ஸக்கர்பேர்க் தொடருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2013ஆம் ஆண்டு Internet.org என ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக்கின் மேற்படித் திட்டமானது, 36 நாடுகளில், இணையத்தை பெற்றுக்கொள்ள முடியாத 19 மில்லியன் பேருக்கு இணையத்தை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
34 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
39 minute ago
2 hours ago