Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் வாழும் இடங்கள் என பேஸ்புக்கால் நம்பப்படும் அதிக விவரமான வரைபடங்களை தயாரிக்கவுள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. இவ்வரைபடங்களானவை, இவ்வருட இறுதியில் பொதுமக்களின் பார்வைக்கு வரவுள்ளது.
மேற்குறிப்பிட்ட வரைபடங்களில், மனிதனால் அமைக்கப்பட்ட நிர்மாணங்களை அடையாளங்காணும் பொருட்டு செயற்கை நுண்ணறிவு மென்பொருளை சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் பயன்படுத்தவுள்ளது.
மேற்படி வரைபடங்கள் மூலம் பெறப்படும் தகவல்களை பயன்படுத்தி, இணையத்தை வழங்குகின்ற ட்ரோன்களை எங்கு அனுப்ப வேண்டும் என கண்டறியலாம் என நம்பிக்கையை பேஸ்புக் வெளியிட்டுள்ளது. எனினும், ஏனையவர்களும் மேற்படி வரைபடத்தை பயன்படுத்தலாம் என பேஸ்புக் கூறியுள்ளது.
இதுதவிர, மேற்படி வரைபடங்களின் மூலம் பெறப்படும் தரவுகளானது பல செயலிகளில் தாக்கம் செலுத்தும் என நம்புவதாக பேஸ்புக், வலைப்பூ பதிவொன்றில் தெரிவித்துள்ளது. அதாவது சமூக-பொருளாதார ஆராய்ச்சியிலும் இயற்கைப் பேரிடர்களுக்கான ஆபத்து மதீப்பீடு என்பவற்றுக்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aquila ட்ரோன்கள் பற்றி கடந்த வருடம் தகவல்களை வெளியிட்டிருந்த சமயத்திலேயே, வரைபடம் பற்றிய திட்டமொன்றில் பணியாற்றுவதாக பேஸ்புக், முதன்முதலில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்நேரத்தில் இது தொடர்பான தகவலை வெளியிட்ட பேஸ்புக்கின் பொறியியல்துறை தலைவர் ஜெய் பரிக், தமது தொழில்நுட்பத்தின் மூலம், கூடாரமளவுக்கு சிறிதான நிர்மாணங்களையும் அடையாளங் காணமுடியும் எனத் தெரிவித்திருந்தார்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago