Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது.
செப்டம்பர் 7ஆம் திகதி விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் லேண்டரை தரை இறக்கும்போது நிலவில் இருந்து சில கி.மீட்டர் தொலைவில் அதன் வேகம் அதிகரித்தது. இதன் காரணமாக லேண்டர் கருவி திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் உதவியுடன் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா கூறியுள்ளது.
இந்த நிலையில், விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது தொடர்பான தகவலை ஏற்கெனவே இஸ்ரோவின் இணையதளத்தில் வெளியிட்டிருப்பதாகவும், மற்றவர்களின் ஆய்வை நாங்கள் சரிபார்க்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .