Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஒக்டோபர் 28 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் விக்கிபீடியா தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தீவிர இடதுசாரி ஆர்வலர்களால் கட்டுப்படுத்தக்கூடிய தளமாக விக்கிபீடியா உள்ளது. தற்போது இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக் கும் இடையே நடந்து வரும் மோத லில் பிரச்சினையை உருவாக்க விக்கிப்பீடியாவைச் சேர்ந்த 40 ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் மூலம் இஸ்ரேல்தான் தவறு செய் கிறது நம்ப வைக்க முயற்சி நடக் கிறது. எனவே, பொதுமக்கள் விக்கிப்பீடியாவுக்கு நன்கொடை அளிப்பதை நிறுத்தவேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரும், எக்ஸ் வலைதள அதிபருமான எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
இதுதொடர்பான அறிக்கை, பைரேட் வயர்ஸ் செய்தி நிறுவனம் மூலம் வெளியாகியுள்ளதை நாம் அறியலாம். எனவே, பொதுமக்கள் அமெரிக்காவைச் சேர்ந்த விக்கிப் பீடியாவுக்கு நன்கொடை அளிக்கக் கூடாது. அது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இந்தியாவில் விக்கிப்பீடியாவுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்களை அதன் ஆசிரியர்கள் திருத்துவதாக புகார் எழுந்தது. இந்தியாவைச் சேர்ந்த ஏஎன்ஐ செய்தி நிறுவனம், மத்திய அரசின் செய்தி நிறுவனம் என்றும், எதிர்க்கட்சி தலைவர்கள் பற்றிய செய்திகளை வெளியிடாமல், பாஜக தலைவர்களின் செய்திகளை மட்டும் ஏஎன்ஐ வெளியிடுகிறது என்றும் விக்கிப்பீடியாவில் குறிப் பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஏஎன்ஐ நிறுவனம் சார்பில் விக்கிப் பீடியாவுக்கு எதிராக வழக்கு தொட ரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago