2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

அமேசனின் திடீர் முடிவால் ‘லோர்ட் ஒஃப் தி ரிங்க்ஸ்‘ ரசிகர்கள் ஏமாற்றம்!

Editorial   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமேசன்  நிறுவனத்தின் கேம்ஸ் ஸ்டூடியோவானது(  Amazon Game Studios) கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல ஹொலிவூட் கற்பனைத் தொடரான லோர்ட் ஒஃப் தி ரிங்க்ஸை அடிப்படையாக வைத்து  (Lord of the Rings)வீடியோ கேம் ஒன்றை தாயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. 

  மேலும் இதனை சீனாவைத் தளமாகக் கொண்ட லியோ டெக்னாலஜிஸுடன் இணைந்து தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த சீன நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றுமொறு நிறுவனமான  டென்சென்ட் இதனை  கையகப்படுத்தியிருந்தது.
   இந் நிலையில் இது தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இரு நிறுவனத்துக்கும் இடையில் மோதல் போக்கினை ஏற்படுத்துவதால் குறித்த வீடியோ கேம் தயாரிப்பினை இரத்து செய்துள்ளதாக  அ​மேசன் நிறுவனம் அறிவித்துள்ளது.
   இச் செய்தியானது கேம் பிரியர்கள் மற்றும் லோர்ட் ஒஃப் தி ரிங்க்ஸ்‘ ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .