2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

இனி Mobile இல் உதட்டோடு உதடு முத்தமிடலாம்

Editorial   / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காதலிக்கும் போது அவள் அல்லது அவன், ஒவ்வொரு நொடியும் தன்னுடன் இருக்கமாட்டானா அல்லது இருக்கமாட்டாளா என்றெல்லாம் ஏங்கி தவித்துக்கொண்டிருக்கும் காலமிருந்தது.

நிலைமை தற்போது மாறி, எந்தநொடியும் ​அலைபேசியில் அழைப்பை எடுத்து பேசிக்கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. காத்திருப்புக்கு அவசியமில்லை. வீடியோ அழைப்பின் ஊடாகவும் முகத்துக்கு முகம் பேசிக்கொள்ளலாம்.

 அதற்கு ஒருபடி மேல் சென்று அருகில் சந்தித்து காதல் செய்ய முடியாமல் தவிக்கும் காதல் ஜோடிகளுக்கான ஒரு பிரத்தியேக கிஸ்ஸிங் கேட்ஜெட் சாதனம் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிஸ்ஸிங் கேட்ஜெட்டா? அப்படினா என்ன? இது என்ன செய்யும்? உண்மையாகவே, உங்கள் காதலர் அல்லதுகாதலி முத்தமிடுவது போலவே இந்த கேட்ஜெட் உங்களை உணர செய்யுமா? உதடுகள் விரியும் உண்மையைப் பார்க்கலாம் வாங்க.

 நீண்ட தூர உறவில் இருக்கும் ஜியாங் சோங்லி என்பவர், தனது காதலியுடன் நெருக்கமாக இருக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில், என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வந்திருக்கிறார்.

ஒருவரையொருவர் பிரிந்து இருக்கும் போது நெருக்கத்தை பேணுவது கடினமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். நீண்ட தூரம் காரணமாக, அவர்களின் தொடர்பு மொபைல் அழைப்புகள் வழியாக மட்டுமே இருந்ததாக வருத்தமாகத் தெரிவித்தார். இந்த நேரத்தில் தான் நீண்ட தூர தம்பதிகள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க  

  ஒரு புதுமையான தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார். நீண்ட தூர உறவில் இருக்கும் தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, மெய்நிகர் நெருக்கத்தை அதிகரிக்கும் மற்றும் உணரச் செய்யும் ஒரு புதுமையான சாதனத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

  இந்த உந்துதலின் அடிப்படையில் தான், அவர் ஒரு கிஸ்ஸிங் கேட்ஜெட்டை உருவாக்கியுள்ளார். Zhongli  இன் இந்த புதிய கண்டுபிடிப்பு இப்போது, சீன சமூக ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முத்தமிடும் சாதனம் கிஸ்ஸிங் டிவைஸ் (kissing device) என அழைக்கப்படுகிறது. சீனாவின் சாங்சோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு இதுவாகும். இது உங்கள் துணையின் நிஜ முத்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.

 இது ஒரு மொபைல் கேட்ஜெட் ஆகும். இதை காதலர்கள் அவர்களின் மொபைல் போனில் இணைத்து முத்தமிட துவங்கலாம். இதில் கான்ட்ராப்ஷன் 'சிலிகான் லிப்ஸ்', பிரஷர் சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்கள் போன்றவை உள்ளன.

இது பயனரின் உதடுகளின் அழுத்தம், இயக்கம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை அப்படியே மறுமுறையில் பிரதிபலிக்கும் திறன் கொண்டதாம். இந்த சாதனம் உங்கள் துணையின் உண்மையான முத்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் திறன் கொண்டது. நீண்ட தூரக் காதல் ஜோடிகள் மற்றும் தம்பதிகள் 'உண்மையான' உடல் நெருக்கத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான வழியாக இந்த முத்தமிடும் சாதனம் விளம்பரப்படுத்தப்படுகிறது.

இந்தச் சாதனம் சீன சமூக ஊடகப் பயனர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்த இயக்கத்தைப் பிரதிபலிக்கும் இந்த சாதனத்தின் திறன் நீண்ட தூர உறவுகளில் உள்ள பலரின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இப்போதே இதற்கு மவுசு அதிகரித்துவிட்டது.

ஒரு முத்தத்தை தங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்ள, பயனர்கள் அவர்களின் மொபைலில் ஒரு ஆப்ஸை பதிவிறக்கம் செய்து, கிஸ்ஸிங் டிவைஸை மொபைலின் சார்ஜிங் போர்ட்டில் செருக வேண்டும். தம்பதிகள் வீடியோ காலிங் அம்சத்தைத் துவங்கிய பின்னர், கிஸ்ஸிங் டிவைஸ் ஆப்ஸ் வழியாக முத்தங்களைப் பரிமாறலாம் என்று கூறப்படுகிறது.

சிலிகான் உதடுகளை முத்தமிட துவங்கினால், மறுமுனையில் இருப்பவருக்கு முத்தம் பரிமாறப்படும். பல சமூக ஊடக பயனர்கள் இந்த சாதனத்தை வேடிக்கையான கண்டுபிடிப்பு என்று கூறினாலும், மற்றவர்கள் இதை ஒரு 'கொச்சையான' கண்டுபிடிப்பு என்று கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

 இன்னும் சிலர், இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .