Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வாரம் கொழும்பு மெஜெஸ்ற்றிக் சிட்டியில் இடம்பெற்ற சம்சுங் அனுபவ தினத்தன்று Galaxy S6 edge+ மற்றும் Galaxy Note 5 ஆகியன இலங்கையில் அறிமுகபடுத்தப்பட்டிருந்தது.

இந்த சம்சங் அனுபவ தினத்தன்று Temple Run, Subway Surfer, the Mortal Blitz Game, Real Racing and a Stamp Tour போன்ற திறன்பேசி விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டிருந்தன. இதேவேளை அங்கு அமைக்கப்பட்டிருந்த மெய்நிகர் அரங்கில், Galaxy S6 edge+ மற்றும் Galaxy Note 5 உள்ளடங்கலாக சம்சுங்கின் புதிய தயாரிப்புகளுக்கு பரிச்சயமாகிக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்திருந்தது.

புதிய Galaxy S6 edge+ திறன்பேசியானது 5.7 அங்குல திரையைக் கொண்டிருப்பதுடன், 6.9 மில்லிமீற்றரிலான மெல்லிய உடலைக் கொண்டுள்ளது. தவிர, இதில் நேரடியாக காணொளிகளை அசைவில்லாமல் ஒளிபரப்பக்கூடிய வசதி காணப்படுவதுடன், ஒரே திரையில் பல காணொளிகளை சமகாலத்தில் பார்வையிடும் வசதியும் காணப்படுகிறது. இந்த திறன்பேசியின் கலத்தை விரைவாக மின்னேற்றிக் கொள்ள முடிவதுடன், Wireless மற்றும் விரைவாக மின்னேற்றும் சாதனங்களுடனும் பொருந்தக்கூடிய வகையில் உள்ளது. மேலும் 1.9 குவியமுள்ள , 16 மெகா பிக்ஸல் கமெரா மூலம் இருட்டிலும் தெளிவான படங்களை எடுக்கக்கூடிய வகையிலும், விரைவாக அசைந்து செல்லும் பொருட்களை படம் பிடிக்க கூடிய வகையிலும் உள்ளது.

செப்டெம்பர் 25ஆம் திகதி முதல் இலங்கையில் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவுள்ள Galaxy S6 edge+ இன் விலை 128,990 ரூபாயாகவுள்ளதுடன், Galaxy Note 5 இன் விலை 119,900 ரூபாயாகவும் உள்ளது.
15 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
51 minute ago