Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாரதி இல்லாத கார்களுக்காக உருவாக்கப்பட்ட இரண்டு புதிய அமைப்புக்கள் மூலம், GPS இயங்காத நிலையிலும் வழமையான கமெரா ஒன்றிலோ அல்லது திறன்பேசி ஒன்றிலோ, குறிப்பிட்ட கார் எங்கே இருக்கின்றது என்றும் எத்திசை நோக்கி பயணிக்கின்றது என்றும் அக்கார் பயணிக்கும் வீதியிலுள்ள பொருட்களை அடையாளம் காண முடிகிறது. பல்லாயிரக்கணக்கான ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான உணரிகள் செய்யும் அதே பணியையே மேற்படி அமைப்புகள் செய்கின்றன.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களாலே, வெவ்வேறான ஆனால் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படக்கூடிய மேற்படி, இரண்டு புதிய அமைப்புக்களை தயாரித்துள்ளனர். இந்த அமைப்புக்களுக்கான விளக்கவுரைகள், இணையத்தில் இலவசமாக பார்வையிடக் கூடிய வகையில் உள்ளது.
தற்போதைய நிலையில், இந்தப் புதிய அமைப்புக்கள் மூலம் சாரதி இல்லாத கார்களை கட்டுப்படுத்த முடியாமல் விட்டாலும், தானியங்கி வாகனங்களையும் ரோபோக்களையும் உருவாக்கும்போது அவை எங்கு இருக்கின்றன என்பதை துல்லியமாக அடையாளங் காணும் மேற்படி அமைப்புகள் செய்கின்றன. தவிர, தற்போது சில பயணிகள் கார்களில் உள்ள மோதலைத் தவிர்க்கும் தொழில்நுட்பங்கள் போன்று எச்சரிக்கை அமைப்பாக மேற்படி அமைப்பு தொழிற்படக்கூடும்.
SegNet என்ற முதலாவது அமைப்பானது, தான் முன்னொருபோதும் காணாத வீதியினுடைய புகைப்படத்தை புகைப்படம் பிடித்து, அதனை பகுத்தறிந்து, வீதிகள், வீதி அடையாளங்கள், வானம், கட்டடம், நடைபாதை, மரம், சமிக்ஞை, வேலி, வாகனம், பாதசாரிகள், சைக்கிள், கம்பம் ஆகிய 12 வகைகளாக வகைப்படுத்துகிறது. இந்த, அமைப்பானது குறைந்த வெளிச்சம், நிழல், இரவு நேரங்களிலும் தொழிற்படக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, 90 சதவீதமான துல்லியத்தையும் வழங்குகின்றது. விலைகூடிய உணரிகள், ரடாரை ஆதாராமாகக் கொண்ட உணரிகள் மூலம் தொழிற்பட்ட இவ்வாறான அமைப்புக்கள், கார் பயணித்துக் கொண்டிருக்கும் போது மேற்கூறிய அமைப்பு போன்று துல்லியத்தை வழங்கவில்லை.
SegNet இணையத்தளத்துக்குச் செல்லும் பயனர்கள், புகைப்படத்தை தரவேற்றுவதன் மூலமோ அல்லது உலகில் உள்ள எந்தவொரு மாநகரம் அல்லது நகரத்தினைந தேடி, அவ்வமைப்பானது மேற்கூறியவாறு சரியாக வகைப்படுத்துகிறதா என சரிபார்த்துக் கொள்ள முடியும். இவ்வமைப்பானது நகர வீதிகளிலும், மோட்டார் வீதிகளிலும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி வாகனங்களை உருவாக்குவதில், நான் எங்கு இருக்கிறேன், என்னைச் சுற்றி என்ன இருக்கிறது, அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் ஆகிய மூன்று முக்கிய தொழில்நுட்ப கேள்விகள் ஆதாரமாக இருக்கையில், இதில் இரண்டாவது கேள்விக்கு SegNet பதிலளிக்கின்றது. இதேவேளை, வேறான ஆனால் SegNet உடன் இணைந்து செயற்படக்கூடிய இரண்டாவது அமைப்பானது, புகைப்படத்தின் மூலம் இருக்கும் இடத்தையும் பயணிக்கும் திசையையும் கண்டறிந்து, மேற்படி முதலாவது கேள்விக்கும் பதில் வழங்குகின்றது.
2 minute ago
30 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
30 minute ago
53 minute ago
2 hours ago