Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 21 , பி.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கூகிளின் புகைப்பட பகிர்வுச் சேவையான கூகிள் போட்டோஸ், தற்போது மாதாந்தம் 100 மில்லியனுக்கு மேற்பட்ட இயங்குநிலை பாவனையாளர்களைக் கொண்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. தவிர 3,720 டெராபைட் நினைவகத்தை ஒதுக்கியுள்ளதாகவும் கூகிள் அறிவித்துள்ளது.
இந்த கூகிள் போட்டோஸ் ஆனது iOS, அன்ட்ரொயிட் இயங்குதளங்களிலும், இணையத்தளத்திலும் கிடைக்கின்றது. இந்தச் சேவையானது, கூகிளின் சமூகவலைத்தளமான கூகிள் பிளசில் இருந்து கடந்த மே மாதம் தனியாக பிரிந்திருந்தது.
தனது இலகு தன்மை காரணமாகவும், பல ஒன்றிணைந்த வசதிகளைக் கொண்டிருந்ததன் காரணமாகவும் தனது மற்றைய போட்டியாளர்களான Dropbox இன் Carousel, அப்பிளின் iCloud, யாகூவின் Flickr ஐ விட பயனர்களால் விரும்பப்பட்டிருந்தது.
கடந்த மாதம் இடம்பெற்ற வன்பொருள் நிகழ்வு ஒன்றில், ஏற்கனவே 50 பில்லியன் புகைப்படங்கள் தரவேற்றப்பட்டுள்ளதாக கூகிள் தெரிவித்திருந்தது.
இது தவிர கூகிள் போட்டோஸில் பகிரப்பட்ட புகைப்படங்கள் தொடர்பான சுவாரஷ்யமான தகவல்களையும் கூகிள் வெளியிட்டுள்ளது. அதன்படி பகிரப்பட்ட புகைப்படங்களில் அதிகமானவை உணவு தொடர்பாகவே காணப்படுவதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து திருமணம், இசை நிகழ்ச்சிகள், கிறிஸ்மஸ், பிறந்தநாள் நிகழ்வு, கேளிக்கை விடுதிகள் தொடர்பான புகைப்படங்களே அதிகம் பகிரப்பட்டுள்ளன.
அடுத்து விலங்குகள் தொடர்பாக பகிரப்பட்ட படங்களில் அதிகமாக நாய் தொடர்பான புகைப்படங்களே அதிகம் பகிரப்படுள்ளன. இதையடுத்து கார் தொடர்பான புகைபடங்கள் அதிகமாக பகிரப்பட்டுள்ளன.
அதிக புகைப்படங்கள் பாரிஸிலேயே எடுக்கபட்டுள்ளதோடு, அதையடுத்து நியூயோர்க், பார்சிலோனா ஆகிய இடங்களில் அதிக புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
11 minute ago
15 minute ago
19 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
19 minute ago
23 minute ago