2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

Flash பயன்படுத்துவதை பேஸ்புக் நிறுத்தம்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 22 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரையில் Adopeஇன் Flash தொழில்நுட்பத்தின் மூலம் சமூக வலைத்தள ஜாம்பாவானான பேஸ்புக்கானது, காணொளிகளை காட்டி வந்த நிலையில், தற்போது அதை நிறுத்தியுள்ளது. இதற்கு பதிலாக, HTML5 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள video playerஐ பேஸ்புக் தனது இணையத்தள பதிப்பில் பாவிக்கவுள்ளது.   

எனினும் பேஸ்புக்கில் உள்ள விளையாட்டுக்களில் தொடர்ந்தும் Flash பயன்படுத்தப்படும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. எனினும், இதிலும் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து பேஸ்புக் ஆராய்ந்து வருகிறது.

Flashஇலிருந்து அண்மையில் பல நிறுவனங்கள் விலகிக்கொண்ட நிலையிலேயே, இறுதியாக பேஸ்புக் இணைந்துள்ளது. பலர், Flashஐ பாதுக்காப்புப் பிரச்சினையாக கருதுகின்றனர். இதில் உள்ள குறைபாடுகள் காரணமாக, இலகுவாக Flash, இணையத் திருடர்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.

HTML5 தொழில்நுட்பத்துக்கு மாறியதன் மூலம், காணொளிகளை கையாளும் பேஸ்புக் அமைப்பின் திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக பேஸ்புக்கின் முன் முகப்பு உருவாக்குநர்களில் ஒருவரான டேனியல் பௌலிங் தெரிவித்துள்ளார்.  

எனினும் தமது இணைய உலாவிகளின் இறுதி இற்றைப்படுத்தல்களை கொண்டவர்களுக்கே HTML5 தொழில்நுட்பத்துடனான video player அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், இணைய உலாவிகளின் புதிய இற்றைப்படுத்தல்களை கொண்டிருக்காதவர்கள், மேற்படி HTML5 தொழில்நுட்பத்துடனான video playerஐ உபயோகிக்கையில் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.

இந்த வருடம், ஜனவரி மாதத்தில் HTML5 தொழில்நுட்பத்துடனான video playerஐ யுட்யூப் அறிமுகப்படுத்தியிருந்தது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .