2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

Google Play Booksஇலும் இரவு நேர வாசிப்பு முறை

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 18 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரவு நேரத்தில் அமெஸோனனின் Fire டப்லெட்களில் வாசிக்கும்போது ஏற்படும் சிக்கலை நிவர்த்தி செய்யும் பொருட்டு Blue Shade என்ற முறைமையை அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் மூலம் நிறத்தையும் வெளிச்சத்தையும் இரவு வாசிப்பிற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து இரவு வாசிப்பை இலகுவாக்கும் முறைமையை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியிருந்தது.

இதனையடுத்து அமெஸொனைப் பின்பற்றிய கூகிளும் தனது மின்புத்தகங்கள் செயலியில் இரவு நேரத்தில் வாசிப்பவர்களின் கண்களுக்கு மிகவும் இலகுவாகவும் வசதியாகவும் இருக்கின்ற முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் படி நேரம் செல்லச் செல்ல Google Play புத்தகங்களில் வெளிப்படுத்தப்படும் நீல நிற ஒளியை வடிகட்டவுள்ளது. அதன்படி, மென் மண்ணிற ஒளியில் தனது திரையை வெளிப்படுத்தவுள்ளது.

இந்த வசதியை கூகிளானது நைட் லைட் என அழைக்கின்றது. வெளிப்புறத்தில் காணப்படும் இயற்கையான சூரிய ஒளியின் அளவைப் பொருட்டு, நைட் லைட் வசதியானது தானாகவே மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிற சரி செய்யும் முறையால், உங்களது கண்களுக்கு மேலதிக வசதியை வழங்குவதுடன் குறைந்த ஒளியிலான வாசிப்பையும் மேம்படுத்துகிறது என கூகிள் தெரிவித்துள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .