Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
Talk Talk ஹக்கிங் தாக்குதல் தொடர்பில் பதினைந்து வயதுச் சிறுவனொருவன் வடக்கு அயர்லாந்தில் கைது செய்யப்பட்டு, மேலும் விசாரணைகள் மீதமுள்ள நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளான்.
இந்த ஹக்கிங் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவரும் மாநகர பொலிஸார், அன்ட்ரிம் பிராந்தியத்தில் உள்ள வீடொன்றில் திங்கட்கிழமை (26) சோதனை நடாத்தியுள்ளனர்.
கணினியைத் தவறாகப் பயன்படுத்தும் சட்டத்தின் அடிப்படையிலான குற்றம் தொடர்பான சந்தேகத்திலேயே மேற்படிச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். அன்ட்ரிம் பிராந்திய பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த இந்தச் சிறுவனை, வடக்கு அயர்லாந்து பொலிஸ் சேவையைச் சேர்ந்த புலானாய்வாளர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.
இந்தச் சிறுவன், நவம்பர் மாதத்திலுள்ள ஒரு திகதி வரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாநகர பொலிஸார் செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள அலைபேசி, இணையை இணைப்பு வழங்குநரான TalkTalk இன் இணையத்தளம் கடந்த வாரம் தாக்குதலுக்குள்ளாகி இருந்தது.
இதில், வங்கி விவரங்களும், தனிப்பட்ட தகவல்களும் கையாளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டபோதும், கிரடிட் அட்டை, டெபிட் அட்டை இலக்கங்கள் திருடப்படவில்லை என Talk Talk தெரிவித்திருந்தது.
49 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
4 hours ago