Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 19 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூட்டு நிதி திரட்டல் வீடியோ விளையாட்டான Star Citizen ஆனது 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட நிதியளிப்பை தனது ரசிகர்களிடத்திருந்தும் ஆதரவாளர்களிடத்துமிருந்தும் அடைந்துள்ளது.
விண்வெளி, சண்டை விளையாட்டான Star Citizenஇன் நிதியளிப்புக்கான கூட்டு நிதி திரட்டலானது 2012ஆம் ஆண்டு Kickstarter ஆரம்பமாகியிருந்தது. அன்றிலிருந்து, மேற்படி விளையாட்டை விளையாட பதிவு செய்தவர்களிடமிருந்தும் முன்னைய வடிவங்களை சோதனை செய்தவர்களிடமிருந்தும் நிதியை சேகரித்திருந்தது.
Kickstarterஇல் ஆரம்பிக்கப்பட்ட கூட்டு நிதி திரட்டல் முடிவடைந்த பின்னும் Star Citizen ஆனது முற்பதிவுகளாலும் மெய்நிகர் உலகத்தில் விளையாட அனுமதிப்பற்கான விற்பனை மூலம் தொடர்ந்து பணமீட்டியிருந்தது. ஒரு மில்லியன் பேர் விளையாட்டை விளையாட பதிவு செய்திருப்பதாக கடந்த ஒக்டோபரில் Star Citizen அறிவித்திருந்தது.
அந்தவகையில், இந்தவாரத்தில் Star Citizen விளையாட்டின் அல்பா பதிப்பு எனக்கூறப்படும் இரண்டாவது சோதனையை அறிமுகப்படுத்தியிருந்தது. எனினும் Star Citizen விளையாட்டானது எப்போது வெளியிடப்படும் என உறுதியான திகதி கூறப்படாவிட்டாலும், எதிர்வரும் ஆண்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டானது கிறிஸ் ரொபேர்ட்சின் தலைமையிலேயே வடிவமைக்பட்டிருந்தது.
Star Citizen விளையாட்டானது ஏனைய விண்வெளிச் சண்டை விளையாட்டுக்களான Elite: Dangerous, Eve: Valkyrie ஆகிவற்றில் இருந்து போட்டியை எதிர்நோக்கவுள்ளது. Elite: Dangerous கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டதுடன், Eve: Valkyrie ஆனது அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago