Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஜூலை 21 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருத்துவ உலகில் பல கண்டுபிடிப்புகள் வியக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. அன்றாடம் புதிது புதிதாக ஏதாவதொரு கண்டுபிடிப்புகள் வெளிவந்தவண்ணமே இருக்கின்றன. அதற்கிணங்க அண்மையில் அமெரிக்க மருத்துவ பொறியியலாளர்களால் பரிசீலிக்கப்பட்ட சத்திரசிகிச்சை ரோபோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
மனிதனின் குறைந்தளவிலான கட்டளையினை மாத்திரம் உள்வாங்கி வான்கோழி ஒன்றின் நெஞ்சுப்பகுதியை மிகையொளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக சத்திரசிகிச்சையினை செய்து முடித்திருக்கிறது இந்த மருத்துவ ரோபோ கருவி.
இந்த கருவியினை இயக்கிய குழுவின் தலைமை மருத்துவர் கலாநிதி ஸ்டீபன் ஸ்மித் கருத்துத் தெரிவிக்கையில்… இது எங்களுடைய ஆரம்ப நடவடிக்கைதான். இன்னும் சில காலங்களில் மனிதனின் தலையீடின்றி சத்திர சிகிச்சை செய்யக்கூடிய விதத்தில் இந்த ரோபோ மாற்றப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த ரோபோவின் உதவியுடன் சத்திரசிகிச்சை செய்வது செலவு குறைவு. ஆகையினால் ஏழை மக்களும் இந்த ரோபோ மூலமாக பயன்பெறுவர் என நம்பப்படுகிறது.
6 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 minute ago