Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஜூலை 29 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதனுக்கு பசியெடுத்தால் அவன் வாய்விட்டு பசிக்கிறது என்று சொல்வான். ஆனால் தாவரங்களுக்கு அப்படி பசியெடுத்தால் என்னசெய்வது..? அதற்காகத்தான் இப்பொழுது தண்ணீர் கேட்கும் தாவரத் தொட்டியினைக் கண்டுபிடித்திருக்கிறார் இங்கிலாந்தின் கலிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த 22வயதுடைய பல்கலைக்கழக மாணவி நடாலி கிங்.
தன்னுடைய பல்கலைக்கழக ஒப்படைக்காகவே இந்த கண்டுபிடிப்பினை செய்திருக்கிறார். இத்தொட்டியில் வளர்க்கப்படும் தாவரங்கள் சோர்வடைந்தால் ஒளி, ஒலி வடிவங்களில் தங்களை தேவைகளை வெளிப்படுத்தும். இதனால் தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிக்கொள்ளும் தாவரங்களாக இவை செயற்படும்.
இந்தக் கண்டுபிடிப்புப் பற்றி நடாலி கிங் குறிப்பிடுகையில்… என்னுடைய பாட்டனாரை மனதிற்கொண்டே இதனை நான் கண்டுபிடித்தேன். என் பாட்டனாருக்கு தாவரங்கள் வளர்ப்பதென்றால் கொள்ளை பிரியம். ஆனால் அவருக்கு கண்களில் பார்வை குறைவு. இதனால் தாவரங்களை சரியாக கவனிக்க முடிவதில்லை. இதுபோன்ற பிரச்சினை வயது வந்தவர்களுக்கு நிச்சயமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களின் பிரச்சினையினை இந்த தாவரத் தொட்டி நிவர்த்தி செய்யுமென நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2 minute ago
2 hours ago
xlntgson Friday, 30 July 2010 09:59 PM
பீப்பீப் பீம்பீம்... இருக்கிற சத்தங்கள் போதாதென்று இது வேறயா? முதற்காரியம் இந்த மாதிரியான ஒலி எழுப்பும் சகல கண்டுபிடிப்புகளையும் தடை செய்யவேண்டும். நமது கேட்கும் சக்தி குறையும் சத்த சூழல் மாசுபடல் என்று ஒன்று இருக்கிறது என்றே தெரியாமல் கையடக்க தொலைபேசி எழுப்பும் ஒசைகளினால் கூட சிறு வண்ணத்தி பூச்சியில் ஆரம்பித்து தேனீக்களை கூடஇது பாதிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அவை மனிதரை இப்படி விரட்டி விரட்டி முந்தியெல்லாம் தாக்கினவையா? சீகிரி குழவிகள் உல்லாச பயணிகளை கொட்டியமையை இங்கு நினைவு கூர்கிறேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
2 hours ago