2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பூப்பூக்கும் ஓசை… அதை கேட்கத்தான் ஆசை…

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பூப்பூக்கும் ஓசை… அதை கேட்கத்தான் ஆசை… என்று பாடியவர்களால் பூப்பூக்கும் ஓசையினை கேட்கமுடியவில்லை. ஆனால் பூக்கள் எப்படி விரிகின்றன என்று எக்ஸ்ரே மூலமாக அறிந்திருக்கிறார் ஹியூஜ் தேர்வி என்பவர்.

பொதுவாக எதனையும் ஆராய்ந்து பார்க்கும் மனப்பான்மை மிக்கவன் மனிதன். தோலில் மேலுள்ள அழகினைவிட அதனுள் இருக்கும் விடயங்களை அறிவதற்கே பெரிதும் ஆசைப்படுவான். அந்த ஆசையினால்தான் பூ விரியும் அந்தரங்கத்தை எக்ஸ்ரே எடுத்திருக்கிறார் ஓவியர் ஹியூஜ் தேர்வி.
1996ஆம் ஆண்டு தனது நண்பனின் இசை அல்பத்தின் அட்டைப் படத்திற்காக, அந்த நண்பரின் மண்டையோட்டினை எக்ஸ்ரே எடுத்திருந்தார் ஓவியர் ஹியூஜ். அன்றிலிருந்து எக்ஸ்ரே எடுப்பதனை பல வித்தியாசமான பொருட்களில் பயன்படுத்த தொடங்கினார். அதன் அதிகபட்சமாகத்தான் 'நம்பமுடியாத சிக்கலான் எக்ஸ்ரே' தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி பூக்கள் விரிவதனை படம்பிடித்து உலகுக்குக் காட்டியிருக்கிறார் அவர்.

ஓவியர் ஹியூஜ், சிக்கலான் எக்ஸ்ரே தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி எடுத்த பூக்கள் விரியும் படங்களையே இங்கு காண்கிறீர்கள்.

 


  Comments - 0

  • xlntgson Sunday, 08 August 2010 08:05 PM

    பூ விரியும் போதே பார்த்துவிடவேண்டும் என்கிற ஆசை என்ன ஆசையோ? வித்துக்குள்இருக்கும்இரகசியங்களை அறியப்போய் செயற்கை வித்து கண்டு பிடிக்கலாம் என்கின்றனர். அதற்குள் இருக்கும் மரபு இரகசியத்தை அறிந்து ஆண் பெண் கரு-அணு இன்றியே மனிதனை பிறப்பித்து விடலாம் என்றனர். ஒரு செம்மறி ஆட்டைக்கூட பல்லாயிரம் செலவில் படைத்து சில ஆண்டுகள் கூட வைத்திருக்க முடியவில்லை. ஆராய்ச்சி தொடர்கிறது நல்ல வித்துக்கு பஞ்சம் தான் அது தவம் செய்தும் யோகத்தில் ஈடுபட்டும் தியானத்தில் இருந்தும் சன்யாசம் போகவேண்டியது தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X