A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதிது புதிதாக எதையாவது கண்டுபிடிக்காவிட்டால் கண்டுபிடிப்பாளர்களுக்கு தூக்கமே வராது போலிருக்கிறது. உட்கார்ந்து யோசித்ததில் 'the Scubster' என்னும் புதித நீர்மூழ்கி ஒன்றினை கண்டுபிடித்திருக்கிறார்கள் பிரான்ஸில். இதில் என்ன விசேடமென்றால் சைக்கிள் மிதிப்பதுபோல் இந்த நீர்மூழ்கியினையும் மிதித்து இயக்க முடியும்.
நல்ல சுகதேகியாக இருந்தால் இந்த நீர்மூழ்கியினை ஒரு மணித்தியாலத்திற்கு 8 கிலோமீற்றர் என்ற விகிதத்தில் செலுத்த முடியும். சுமார் 6 மீற்றர் ஆழம்வரை செல்லவும் முடியும். 3.5 மீற்றர் நீளமான இந்த நீர்மூழ்கியில் இரண்டு துடுப்புகள் இருக்கின்றன. இவற்றினை எமது சக்தியினால் இயக்க முடியும்.
ஏனைய நீர்மூழ்கிகள் போல் முற்றாக மூடப்படாமல் இருப்பதால் இந்த நீர்மூழ்கியினை செலுத்தும்போது ஒக்ஸிசன் சிலிண்டர்களை பயன்படுத்த வேண்டும். இந்த அழகிய நீர்மூழ்கிக்கு ‘த ஸ்கப்டெர்’ என செல்லமாக பெயரிட்டிருக்கிறார்கள். ஜேம்ப் போன்ட் படங்களில் வருகின்ற படகுகள் போல் எதிர்காலத்தில் இந்த நீர்மூழ்கியை வடிவமைக்க விரும்புவதாக இதன் கண்டுபிடிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.


15 minute ago
19 minute ago
25 minute ago
35 minute ago
kalai Sunday, 19 September 2010 04:32 PM
கண்டிப்பாக எந்த மாத்ரி வடிவமிது நலமாம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
25 minute ago
35 minute ago