A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

பௌர்ணமி நிலவொளி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அந்த நிலவின் முழு வடிவத்தினை கண்குளிர பார்க்கின்ற ஒரு சந்தர்ப்பமே பௌர்ணமி. இன்று 24ஆம் திகதியும் பௌர்ணமி தினம்தான். ஆனால் மற்றைய பௌர்ணமிகளை விட இன்று ஓர் அதிசயம் நிகழவிருக்கிறது. வழமையான சந்திரனைவிட இன்று தென்படும் முழு நிலவு 12.3 வீதம் சிறிதாக தென்படவுள்ளதென ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த ஜனவரி 30ஆம் திகதி இந்த ஆண்டின் மிகப்பெரிய முழு நிலவு தென்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை மிகச்சிறிய முழுநிலவினை நீங்கள் காணவிருக்கிறீர்கள். நிலவுக்கும் பூமிக்குமிடையிலான தூரம் சுமார் 2 லட்சத்து 39 ஆயிரம் மைல்கள். ஆனால் இன்று பூமியைவிட்ட சந்திரன் தொலைவில் இருக்கிறது. சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 518 மைல்கள் தொலைவில் சந்திரன் இருப்பதாலேயே இன்றைய முழு நிலவு வழமையான முழு நிலவினைவிட 12.3 விகிதம் சிறிதாக தென்படவுள்ளது. 13 மணித்தியாலங்களின் பின்னர் சந்திரன் வழமையான சுற்றுப்பாதைக்கு திரும்பிவிடும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோன்ற சிறிய பௌர்ணமி 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 12ஆம் திகதி நிகழவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


15 minute ago
19 minute ago
25 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
25 minute ago
35 minute ago