A.P.Mathan / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

மனதின் கட்டுப்பாட்டில் இயங்கும் இயந்திரக்கை பொருத்தப்பட்ட ஐரோப்பாவின் ஆஸ்திரியா நாட்டினைச் சேர்ந்த கிறிஸ்டியான் கான்டில்பவர் என்னும் இளைஞன் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
22 வயதுடைய கிறிஸ்டியான் கான்டில்பவர், மனதின் கட்டுப்பாட்டில் இயங்கும் இயந்திரக் கையுடன் வாகனமோட்டும் இலட்சியத்தில் ஜெயித்துக் காட்டியவர். இதனால் உலகம் முழுவதும் பிரபல்யம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
2005ஆம் ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு கைகளையும் இந்த இளைஞன் இழந்தார்.
அதன் பின்னர் கிறேஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. சிகிச்சையின் பலனாக மனதினுடைய கட்டளைக்கேற்ப செயற்படும் இயந்திரக் கைகள் இவருக்கு பொருத்தப்பட்டன.
கையடக்க தொலைபேசிகளின் பற்றரியை சார்ஜ் செய்வதுபோல் இந்த இயந்திர கைகளையும் அடிக்கடி சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் சாதாரண கைபோலவே இதுவும் இயங்கும். அவை பொருத்தப்பட்டிருப்பவரின் மனதின் கட்டளைக்கு ஏற்ப இக்கைகள் செயற்படுவனவாகும்.
அமெரிக்காவுக்கு வெளியே இத்தகைய இயந்திரக்கை பொருத்தப்பட்ட முதல் நபர் இவர். அத்துடன் அந்த இயந்திர கைகளின் உதவியுடன் மீண்டும் தன்னுடைய வாழ்வினை ஆரம்பித்த கான்டில்பவர், தனது இலட்சியங்களில் ஜெயித்தும் காண்பித்தார்.
ஒரு வருடத்திற்கு முன்னார் இயந்திர கையுடன் வாகனத்தினை செலுத்தப் பழகி, பின்னர் அனுமதிப் பத்திரத்தினையும் பெற்றுக் கொண்டார். எவரின் உதவியுமின்றி தன்னுடைய இயந்திர கையினாலேயே தனது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ளக் கூடியவராக இருந்தார் அந்த இளைஞன்.
எனினும் கடந்த 19 ஆம் திகதி, ஆஸ்திரியாவின் கிழக்குப் பகுதியில் அவர் செலுத்திச் சென்ற கார் மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயங்களுக்குள்ளான அவர் நவம்பர் 22 ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கு காரணம் என்னவென்பது தெரியவில்லi. இவ்விபத்தில் அவரின் செயற்கை கை ஏதாவது பங்கு வகித்துள்ளதா என்பது குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன.


42 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
4 hours ago