Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மார்ச் 07 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் மின்சாரத்தினால் இயங்கக் கூடிய ஒற்றை சக்கரம் கொண்ட சைக்கிளொன்றை (யுனிசைக்கிள்) உருவாக்கியுள்ளார்.
சீனாவின் சாங்க்ஸி மாகாணத்தைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற தொழிற்சாலை ஊழியரான லீ யுனியான் வயது 66 என்பவரே இவ்வாறான யுனிசைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்த யுனிசைக்கிள் மூலம் ஒரு மணித்தியாலத்திற்கு 12 மைல்கள் பயணிக்க முடியும் எனவும் 40 மைல்களுக்கு இதனுடைய மின் இயக்கம் நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் அந்த விசேட சைக்கிளுக்கு 'கூல் நண்பன்' என பெயரிட்டுள்ளார். இதற்கான காப்புரிமையையும் அவர் பெற்றுள்ளார்.
இதை தயாரிப்பதற்கு அவருக்கு இரு மாதகாலம் சென்றுள்ளது. இந்த சைக்கிள் அடிப்படையாக ஒரு பெரிய சக்கரத்தையும் சம நிலைக்காக மூன்று சிறிய சக்கரங்களையும் கொண்டுள்ளது. மின்சாரத்திற்காக 3 பட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த சைக்கிளானது பழைய துவிச்சக்கர வண்டியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாகங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் லீ தெரிவித்துள்ளார். இந்த சைக்கிளை உருவாக்க சுமார் 18,000 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
52 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
7 hours ago