Kogilavani / 2011 மே 15 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பேஸ்ரிகள், பீஸ் போன்ற உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி வாகனங்களுக்கான எரிபொருளை தயாரிப்பதற்கு விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.
பிரிட்டனின் லின்கன்ஷயர் பிராந்தியத்திலுள்ள கிறீன் கிறே நிறுவனத்தின் விஞ்ஞானிகளே இத்திட்டத்தை அறிவித்துள்ளனர்.
வீணாக்கப்படும் உணவுப் பொருட்களைக் கொண்டு உயிரியல் எரிபொருட்களை தயாரிக்கவுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படும் மீதமாகிப்போன மற்றும் பழுதடைந்த பேஸ்ரிகள், பொரியல் வகைகள், பீஸ் போன்றவற்றின் எண்ணெயை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் லின்கன்ஷயரிலுள்ள தொழிற்சாலையொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு எரிபொருள் தயாரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுப் பொருட்களிலுள்ள சமையல் எண்ணெயை பிரித்தெடுத்து, அவற்றை மேலும் பதப்படுத்தி டீசலுடன் கலந்து வாகனங்களின் இயந்திரங்களை இயக்குவதற்கு பயன்படுத்த முடியும் என விஞ்ஞணிகள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்திற்காக 50 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
xlntgson Sunday, 05 June 2011 09:29 PM
மீதமானவற்றை கொண்டு செய்வதாக கூறி உணவுப் பொருட்களை விலை அதிகரிக்க செய்து விடுவார்கள். அதுசரி ஏன் மீதமாகிறது? தின்பதற்கு ஆள் இல்லையா, அளவுக்கதிகமாக செய்து விட்டார்களா அல்லது கெட்டுப்போகும் முன் யாருக்கும் கொடுக்க மனமில்லாமலா?
உலர் உணவுப்பொருள்களிலும் மின்சாரம் எடுப்பதால் அவற்றின் விலையும் அதிகம் எனப்படுகிறது!
Reply : 0 0
Tharjumillath Monday, 06 June 2011 03:36 AM
ஆயிரக்கணக்கில் உணவுக்காக மக்கள் பெரும் கஸ்டப்படுகின்றார்கள்.ஆனால் இவர்களோ ஆடம்பரத்திற்காக உணவை வீண் விரயம் செய்கின்றார்கள் இவர்கள்தான் சுயநலவாதிகள் நயவஞ்சகர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago