2025 மே 05, திங்கட்கிழமை

மதுபான அளவை தெரிவிக்கும் கடிகாரம்

A.P.Mathan   / 2011 ஜூன் 19 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மது பாவனை என்பது இப்போது உலகளாவிய ரீதியில் சர்வசாதாரணமாகிவிட்டது. ஏழைகள் உழைப்பின் வலியினை போக்க குடிக்கின்றார்கள். பணக்காரர்கள் களிப்பிற்காய் குடிக்கின்றார்கள். எது எப்படியிருப்பினும் குடியின் விளைவு ஒரே மாதிரியானதுதான்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நாளுக்கு நாள் வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இந்த விபத்துக்களை குறைப்பதற்கு காவல்துறையினர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அண்மையில்கூட கொழும்பில் 19 வயது இளைஞனொருவன் குடித்துவிட்டு 'பிக்கப்' வாகனம் ஒன்றை அதிகாலையில் ஓட்டியதால் மூன்று விபத்துக்களை நிகழ்த்தியிருக்கிறான். இதில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் விபத்துக்குள்ளானார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

அளவுக்கதிகமாக குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதால்தான் இந்த விபத்துக்கள் நிகழ்கின்றன. இந்த கஷ்டங்களை நீங்களாகவே தவிர்த்துக்கொள்ள ஜப்பானைச் சேர்ந்த 'டோக்யோ பிளாஸ் வோர்ஜ்' கைக்கடிகார தயாரிப்பு நிறுவனம் புதிய கைக்கடிகாரம் ஒன்றினை கண்டுபிடித்திருக்கிறது. இதனை நீங்கள் கையில் அணிந்து கொண்டால் உங்கள் ரத்தத்தில் கலந்துள்ள அற்ககோலின் அளவினை நீங்களாகவே அறிந்துகொள்ள முடியும்.

விருந்துகளில் மூக்குமுட்ட குடிப்பவர்கள் வாகனத்தை செலுத்த முன்னர் இந்த கைக்கடிகாரத்திலுள்ள துளையினூடாக ஊதிப் பாருங்கள். அப்பொழுது கைக்கடிகார திரையில் அற்ககோலின் அளவினை உங்களால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும். பச்சை, மஞ்சள், சிவப்பு என மூன்று படிவங்களில் அற்ககோலின் அளவினை இக்கடிகாரம் காட்டும். பச்சை காட்டினால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. நீங்கள் அளவாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். மஞ்சள் என்றால் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும். போதை கொஞ்சம் ஏறி இருக்கிறது என்று அர்த்தம். ஆகையினால் மஞ்சள் எரிந்தால் வேறொரு நபரை வாகனம் ஓட்டச் சொல்வது சிறந்தது. ஆனால் சிவப்பு காட்டினால் ஆபத்து என்று கருத்திற் கொள்ளுங்கள். அளவுக்கதிகமாக மூக்குமுட்டக் குடித்தவர்கள் வாகனத்தை தொடாதிருப்பதே சிறந்தது.

இந்த அரிய கண்டுபிடிப்பு- போதையை விரும்புகின்ற அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாகியிருப்பதென்னமோ கசப்பான உண்மைதான்.

 


You May Also Like

  Comments - 0

  • xlntgson 0776994341;0716597735 sms only Friday, 24 June 2011 09:57 PM

    "கள்ளுக்கடைப் பக்கம் போகாதே! உன் காலைப் பிடித்துக் கெஞ்சுகின்றேன்!"
    சுய புத்தி இருந்தால் தானே, அறிவை இழந்த நிலையில்-
    அது பாட்டுக்கு பீப் பீப் என்று ஒலித்துக்கொண்டு இருக்கும் இவர்கள் பாட்டுக்கு கபக் கபக் என்று ஊற்றிக்கொண்டு இருப்பார்கள்!
    தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன?
    அவ்வளவு கரிசனையானவர்கள் கள்ளுக்கடைப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சம் என்று கூறிக்கொண்டுதான் எல்லாரும் கண்ணு மூக்கு தெரியாமல் குடிக்கின்றனர். எவர் தான் அளவு அறிவர்? உள்ளே போன பின்னால் ஒக்கார..

    சுய புத்தி இருந்தால் தானே, அறிவை இழந்த நிலையில்-
    அது பாட்டுக்கு பீப் பீப் என்று ஒலித்துக்கொண...')">Reply :
    0       0

    fahee Tuesday, 12 July 2011 07:21 PM

    இந்த பக்கம் போகாதே!!!!!!!!!!!
    நீ நலமுடன் வாழலாம்

    Reply : 0       0

    Nalan virumbi Friday, 15 July 2011 09:16 PM

    மது, போதை பொருட்களை இஸ்லாம் தடை செய்வது மனிதனை அழிவில் இருந்து பாதுகாக்கத்தான் . சிந்தியுங்கள் !!! . மது எல்லா பாவங்களின் திறப்பு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X