Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூன் 28 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடிகாரம் என்பது அத்தியாவசியமானதொன்று. அவசரமான உலகின் வேகத்தை அளவிடுகின்ற அற்புத கருவியாக கடிகாரம் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. இப்படியிருக்கையில் கடிகாரங்களின் வடிவங்களும் புதிது புதிதாக வெளிவருகின்றன.
ஜப்பானின் 'டோக்கியோ பிளாஸ்' என்னும் கடிகார வடிவமைப்பு நிறுவனம் அண்மையில் புதியவகை கடிகாரம் ஒன்றினை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பார்ப்பதற்கு கைச்சங்கிலி போலிருக்கும். கையினை அழகுபடுத்துகின்ற கைச்சங்கிலி என்றே பார்ப்பவர்கள் நினைப்பார்கள். ஆனால் அது கடிகாரமாகவும் செயற்படும். அந்த கைச்சங்கிலியில் இரண்டு பொத்தான்கள் இருக்கின்றன. அதில் ஒரு பொத்தானை ஒருதடவை அழுத்தினால் நேரத்தினை காட்டும். இன்னொருமுறை அழுத்தினால் மாதத்தினையும் திகதியினையும் காண்பிக்கும்.
சங்கிலிக் கோர்வையின் இடையில் பொருத்தப்பட்டிருக்கின்ற சிறிய LED திரைகளிலேயே இந்த நேரம் தென்படும் விதத்தில் வடிவமைத்திருக்கிறார்கள்.
130 அமெரிக்க டொலர்கள் (சுமார் 17 ஆயிரம் ரூபாய்) பெறுமதியில் இந்த கடிகாரங்கள் சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
14 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago