Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2011 ஜூன் 29 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ் புக்கிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் புதிய சமூக வலைத்தளமொன்றை ஆரம்பித்துள்ளது. இதற்கு கூகுள் பிளஸ் (Google Plus) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அதிக எண்ணிக்கையானோர் அங்கத்தவர்களாகவுள்ள இணையத்தளமாக பேஸ் புக் விளங்குகிறது. அதேவேளை அதிக எண்ணிக்கையானோரால் பயன்படுத்தப்படும் இணைய தேடல் இயந்திரமாக கூகுள் விளங்குகிறது.
இணைய உலகில் யார் ஜாம்பவான் என்பதில் பேஸ்புக், கூகுள் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பேஸ் புக்கிற்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் சமூக வலைத்தளமொன்றை ஆரம்பித்துள்ளது.
தற்போது மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோருக்கு கூகுள் பிளஸ் சேவை கிடைப்பதாகவும் விரைவில் அது அனைவருக்குமானதாக விஸ்தரிக்கப்படும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Circles’, ‘Sparks’, ’Hangouts’ மற்றும் ‘Mobile’ எனும் நான்கு பிரிவுகளை கூகுள் பிளஸ் கொண்டுள்ளது. உண்மை உலக இடைவினைகளையும் உண்மையான வாழ்க்கைப் பரிமாற்றங்களையும் மேற்கொள்ள கூகுள் பிளஸ் உதவும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
'இன்று மக்களிடையே இணைப்பு இணையம் மூலம் அதிகரித்து வருகிறது. ஆனால் இணையத்திலுள்ள அபத்தமான இணையக் கருவிகள் காரணமாக உண்மை வாழ்க்கை இடைவினைகள் இல்லை கூகுள் பிளஸ் திட்டத்தின் மூலம் நுண்ணிய, செழுமை மிக்க வாழ்க்கைப் பகிர்வை கொண்டுவர முயற்சிக்கிறோம்' என கூகுள் நிறுவனத்தின் பொறியியல் பிரிவுக்கான சிரேஷ்ட உபதலைவரான விக் குண்டோத்ரா தெரிவித்துள்ளார்.
இணைப்பு: கூகுள் பிளஸ்
nagarajan Wednesday, 28 September 2011 07:35 PM
hai google plus
Reply : 0 0
junai Saturday, 19 November 2011 05:06 PM
ரொம்ப ஜோர்தான்
Reply : 0 0
laurelprema Thursday, 27 September 2012 09:10 AM
நல்லா இருக்கு
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
41 minute ago
48 minute ago
48 minute ago