Kogilavani / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
விரல்முனை அளவிலான, உலகில் மிகவும் சிறிய டிஜிட்டல் கமெரா ஒன்றை அமெரிக்காவின் ஹமாச்சர் ஷ்லெம்மர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
முற்று முழுதாக இயங்கும் உலகின் மிகச் சிறிறய டிஜிட்டல் கமெரா கருவி இதுவாகும்.
இக் குட்டி கமெரா ஒரு அங்குலத்தைவிட சற்றே நீளமான அளவுடையது. அதன் நிறை அரை அவுன்ஸ் (14 கிராம்) ஆகும். கைவிரலால் கமெராவை கிளிக் செய்தால் சாதாரண அளவிலான படத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
ஹமாச்சர் ஷ்லெம்மர் நிறுவனத்தின் முகாமையாளர் பிரெட் பேர்ன்ஸ் இது குறித்து தெரிவிக்கையில் 'இது மாபிளைவிட சற்றே பெரிதான, உலகின் மிகச்சிறிய கமெராவாக உள்ள போதிலும் பெரிய கமெராக்கள் பிடிக்கும் அளவிலான புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கக் கூடியது' எனத் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
nilam Wednesday, 16 November 2011 02:47 PM
அப்போ இனி மேலே ரகசியங்கள் பாதுகாக்க முடியாதுங்கோ...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago