2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

'விண்டோஸில்' இயங்கும் தொலைபேசி 'நொகியா'வினால் அறிமுகம்

Super User   / 2011 ஒக்டோபர் 26 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல செல்லிடத் தொலைபேசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான நொகியா கோர்பரேஷன், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருட்கள் மூலம் இயங்கும் தொலைபேசிகளை இன்று புதன்கிழமை அறிமுகம் செய்துள்ளது.

விண்டோஸ் மென்பொருட்கள் மூலம் இயங்கும் முதலாவது செல்லிடத் தொலைபேசி இதுவாகும்.  நொகியா கோர்பரேஷனும் உலகின் மிகப்பெரிய,  கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் கோர்பரேஷனும் 8 மாதங்களுக்கு முன்னர் புதிய செல்லிடத் தொலைபேசி தயாரிப்புக்காக கூட்டிணைவதாக அறிவித்தைத் தொடர்ந்து இத் தொலைபேசிகள் இன்று அறிமுகமாகியுள்ளன.

580 டொலர் விலையுள்ள Lumia 800 மற்றும் 270 டொலர் விலையுள்ள Lumia 710 ஆகியன விண்டோஸ் 7 மென்பொருளில் இயங்குகின்றன.
அப்பிள் இன்கோர்பரேஷன் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் சம்சுங், கூகுளின் அன்ட்ரோய்ட் மென்பொருள் தொலைபேசிகளில் இழந்த சந்தை வாய்ப்புகளை நொகியா நிறுவனம் மீளப்பெற்றுக்கொள்ள இப்புதிய தொலைபேசிகள் உதவும் என சிலர் கூறுகின்றனர்.

ஆனால்  உலகின் முன்னணி செல்லிட தொலைபேசி தயாரிப்பு நிறுவன பின்லாந்தை தளமாகக் கொண்ட நொகியா நிறுவனத்தைப் பொறுத்தவரை இது மிகச்சிறிய, மிகத் தாமதமான ஒரு முயற்சி என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை மலிவு விலையிலான 4 புதிய ஸ்மார்ட்போன்களையும் நொகியா அறிமுகப்படுத்தியுள்ளது. இணைய உலகிற்கு மேலும் 100 கோடி பேரை இணைக்க உதவுவதற்காக இத்தொலைபேசிகளை அறிமுகப்படுத்துவதாக அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீபன் எலோப் லண்டனில் செய்தியாளர் மாநாடொன்றில் கூறியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X