2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

டுவிட்டருக்கு பாகிஸ்தானில் தடை

Super User   / 2012 மே 20 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை தடை விதித்துள்ளது.

முஹம்மது நபிகள் நாயகம் குறித்த கேலிச்சித்திரமொன்றை அகவற்றுவதற்கு டுவிட்டர் இணைத்தள நிர்வாகம் மறுத்மையே இதற்கு காரணம்.

மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் முஹம்மது நபிகள் குறித்த கேலிச்சித்திர போட்டியொன்றை ஊக்குவிப்பதற்கு டுவிட்டர் இணைத்தளம் பயன்படுதத்ப்பட்டதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.

மேற்படி கேலிச்சித்திரம் குறித்து பாகிஸ்தான் ஆட்சேபம் தெரிவித்தபின் அதை நீக்குவதற்கு பேஸ் புக் சம்மதித்தாகவும்ஆனால் டுவிட்டர் இணைத்தளம் அக்கேலிச்சித்திரத்தை நீக்க மறுத்ததாகவும் பாகிஸ்தான் தொலைத்தொடர்புத்துறை அதிகார சபையின் தலைவர் மொஹமட் யாஸின் கூறியுள்ளார்.

"நேற்றிரவு வரை நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவற்றை நீக்குவதற்கு அவர்கள் இணங்கவில்லை. எனவே நாம் அவற்றை தடை செய்தோம்" என யாஸின் கூறினார்.

இத்தடைக்கான உத்தரவு பாகிஸ்தான் தொலைத்தொடர்புத்துறை அமைச்சிலிருந்து வந்ததாகவும் அவர் கூறினார்.
2010 ஆம் ஆண்டு இதேபோன்ற போட்டியொன்றை நடத்தியமையால் பேஸ்புக் இணைத்தளத்திற்கு தடை விதிக்குமாறு பாகிஸ்தான் நீதிமன்றமொன்று உத்தரவிட்டது. இரு வாரங்களின்பின் சர்ச்சைக்குரிய அப்பக்கத்தை பேஸ் புக் நீக்கியதால் அதற்கான தடை அகற்றப்பட்டது.

அதையடுத்து சமூக வலைத்தளங்களில் இறை நிந்தனை விடயங்கள் வெளியிடப்படுகின்றனவா என தான் தொடர்ச்சியாக கண்காணிக்கவுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X