2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

பெண்ணொருவரை விண்வெளிக்கு அனுப்பியது சீனா

Super User   / 2012 ஜூன் 16 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர் உட்பட 3 விண்வெளி வீரர்களைக்கொண்ட விண்ஓடமொன்றை சீனா இன்று விண்வெளிக்கு ஏவியது. ஷென்ஸோ-9 எனும் இவ்விண்கலம் கோபி பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஜியூகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டது.

33 வயதான லியூ யாங் என்பவரே சீன விண்வெளி ஓடமொன்றின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் முதல் வீராங்கனையாவார். 

சோவியத் யூனியன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக விண்வெளிக்கு வீராங்கனையொருவரை தனது சொந்த விண்கலத்தின் மூலம் விண்ணுக்கு அனுப்பும் நாடாக சீனா விளங்குகிறது. இந்த விண்வெளி ஓடத்தில் ஜிங் ஹெய்பெங், மற்றும் லியூ வாங் ஆகியோரும் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.

ஒரு வார காலம் இவர்கள் விண்வெளியில் தங்கியிருந்து பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர்.




  Comments - 0

  • noor faris Saturday, 21 July 2012 10:20 AM

    இறை சக்தியை அறிய ஒரு தருணம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X