2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை வரும் 'நீல நிலவை' இன்று காணலாம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று பௌர்ணமி தினமாகும். இன்றைய தினம் வானில் தோன்றும் முழுமதியில் ஒரு அதிசயத்தைப் பார்க்க முடியும் என்று வானியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

வழமையாக ஒரு வருடத்தில் 12 பௌர்ணமிகள் வருவது வழமை. ஆனால் சிலவேளை வருடத்தில் 13 பௌர்ணமிகலும் வருவதுண்டு. அவ்வாறு வரும் 13ஆவது பௌணமிக்கு 'நீல நிலவு' (ப்ளூ மூன்) என்ற பெயரை வைத்துள்ளனர்.

இப்படி 'நீல நிலவாக' நமது சந்திரன் காட்சி தருவது என்பது அரிதான ஒரு விஷயம். இந்த 13ஆவது அதிசய பௌர்ணமியை பொதுவாக இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை தான் காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படியானால் நிலா நீல நிறமாக காட்சி தருமா என்று கேட்கலாம். அப்படி இல்லை. வழமை போலத்தான் இன்றைய தினமும் நிலவு காணப்படும். இருப்பினும் சில சமயங்களில் வளி மண்டலத்தின் பரவிக் கிடக்கும் தூசு மண்டலம் காரணமாக நிலவின் நிறம் இளம் நீல நிறத்தில் இருப்பது போலத் தோன்றும். தவிர வழமைபோலஇந்த முழு நிலவும் வெண்மையாகத்தான் இருக்கும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் முழு நிலவுக்கு வானியல் நிபுணர்கள் ஒரு பெயர் வைத்துள்ளனர். அதன்படி 12 முழு நிலவுக்கும் ஒரு பெயர் உண்டு. அதேசமயம், 13ஆவதாக வரும் முழு நிலவை 'ப்ளூ மூன்' என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் எந்த மாதத்தில் 2 முறை முழு நிலவு வருகிறதோ அப்போது இந்த ப்ளூ மூன் வருமாம்.

கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதிதான் ஒரு முழு நிலவு வந்தது. இன்று 2ஆவது முழு நிலவு என்பதால் இதை ப்ளூ மூன் என்கிறோம். இவ்வாறானதொரு நீல நிலவை அடுத்து 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் பார்க்க முடியும் என்று வானியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X