2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

வேற்றுக்கிரகவாசிகள் கண்டுபிடிக்கப்படுவர்: விண்வெளி விஞ்ஞானி லார்ட்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 08 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதைப் போல எதிர்வரும் 40 ஆண்டுகளில் வேற்றுக்கிரகவாசிகளும் கண்டுபிடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் மூத்த விண்வெளி விஞ்ஞானி லார்ட் மார்ட்டின் ரீஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது,

விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. பூமியைப் போன்று அங்கும் உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது.

2025ஆம் ஆண்டுக்குள் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து விடுவோம்..

அதைத் தொடர்ந்து அந்த கிரகங்களில் தங்கியிருக்கும் வேற்றுக்கிரகவாசிகள் அடுத்த 40 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது' என்று கூறியுள்ளார்.

  Comments - 0

  • Ashok Tuesday, 11 September 2012 04:05 PM

    நல்ல விசயம்.

    Reply : 0       0

    sujee Friday, 01 August 2014 05:28 PM

    வேகமாக கண்டு பிடிக்க வேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X