2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

நான்கு சூரியன்களுடன் புதிய கோள்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


நான்கு சூரியன்களுடன் காணப்படும் புதிய கோளொன்றை சர்வதேச வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது பூமியிலிருந்து 150 ஒளியாண்டுகளுக்கு அப்பால் பால்வெளிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இப்புதிய கோளுக்கு “பிஎச் 1” (பிளானட் ஹன்டர்ஸ் என்பதன் சுருக்கம்) என்று பெயரிட்டுள்ளனர்.

கொட்டன்வூட்டைச் சேர்ந்த ரொபேர்ட் கக்ளியானோ மற்றும் சன் பிறன்ஸிகோவைச் சேர்ந்த அரிஸ், கியான் ஜெக் ஆகிய வானியல் ஆராய்ச்சியாளர்களே மேற்படி நான்று சூரியனைக் கொண்ட கோளினைக் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியைவிட ஆறுமடங்கு பெரிதான இக்கோளானது வாயுவினால் சூழப்பட்டதென நம்பப்படுகிறது. கக்ளியானோவும் ஜெக்கும் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் பகுதிநேர கோள் கண்டுபிடிப்பாளர்களாக செயற்படுகின்றனர். நாசாவின் கப்லர் தொலைநோக்கியினூடாக வானியல் தரவுகளைப் பெற்று மக்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டத்தினூடாகவே இப்புதிய கோளினைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக தயாரிக்கப்பட்ட தொலைநோக்கியின் பெறுமதி 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் (கிட்டத்தட்ட 7ஆயிரத்து 700 கோடி ரூபாய்).

யேல் பல்கலைக்கழக வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கோளானது ஹவாயில் இருக்கும் பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆய்வு அறிக்கையை யேல் பல்கலைக்கழகத்தின் மெக் ஸ்குவம்ப், நவடாவில் நேற்று முன்தினம் நடந்த அமெரிக்க வானியலாளர் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இக்கோளினது மாதிரி உருவத்தினை நாசா இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

  Comments - 0

  • Mayooran Thursday, 18 October 2012 11:30 AM

    Arpputhama oru kandu pidippu

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X