2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

செவ்வாயில் கனிம வளங்கள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 31 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவ்வாய்க் கிரகத்தில் கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, ஹவாய் எரிமலைப் பகுதியில் இருப்பது போன்று காணப்படுவதாகவும் அவை பூமியின் மணற்பரப்பை ஒத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்காவின் 'நாசா' ஆய்வு நிலையம், க்யூரியாசிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பி வைத்தது. அங்கு அது பல ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.

அண்மையில் செவ்வாய்க் கிரகத்திலுள்ள பாறையொன்றை வெட்டியெடுத்து புகைப்படமொன்றை க்யூரியாசிட்டி அனுப்பி வைத்தது. இதன்மூலம், செவ்வாயில் கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிரகத்தின் மணலை கியூரியாசிட்டி ஆய்வகத்தில் உள்ள அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப் மிகவும் உன்னிப்பாக ஆய்வு செய்ததில் அதில் பளிங்கு கற்படிவங்கள் உள்ளமையும் அங்குள்ள மணல் பூமியின் மணல் பரப்பை ஒத்துள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத.

எனவே அங்கு பூமியை போன்ற கனிம வளங்கள் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று க்யூரியாசிட்டி விண்கல ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி டேவிட் பிளேக் தெரிவித்துள்ளார்.

தனது 22 ஆண்டு காலகட்டத்தில் தற்போதுதான் அதுபோன்ற அதிசய நிகழ்வுகளை காணமுடிகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X