2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 28 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் இன்று புதன்கிழமை நிகழவுள்ளது. அந்தவகையில், இன்று மாலை 5.45 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்த சந்திர கிரகணம் இரவு 10.21 வரை நிகழும் எனவும், இரவு 8 மணியளவில் இதனை தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கும் எனவும் வானியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

சந்திரன் பூமியைக் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை சந்திரன் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவதே சந்திர கிரகணம் ஆகும்.

இது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கும் போதே ஏற்படும்.

இவ்வாறானதொரு நிகழ்வே இன்றைய தினமும் ஏற்படவுள்ளது. இவ்வாண்டின் பின்னர், இனி 2014ஆம் ஆண்டிலேயே மற்றுமொரு சந்திர கிரகணம் ஏற்படும் என்று வானியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் மாத்திரம் இரண்டு சூரிய கிரகணங்களும் ஒரு சந்திர கிரகணமும் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .