2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதிக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தலைமைத்துவ விருது

Super User   / 2013 நவம்பர் 19 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தகவல் மற்றும்  தொடர்பாடல் தொழில்நுட்ப தலைமைத்துவ விருது வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற 2013 உலக உச்சி விருதின் அங்குரார்ப்பண நிகழ்விலேயே ஜனாதிபதிக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சகல பிராந்தியங்களுக்கும் பிரநிதித்துவம் வகிக்கும் உலக உச்சி விருதின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களால் இந்த விருதிற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை, பிராந்தியம் மற்றும் உலகில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முன்னெடுப்புக்களுக்காகவே ஜனாதிபதி மஹிந்தவிற்கு இந்த விருத்து வழங்கப்பட்டுள்ளது.

அவரது தூரநோக்குள்ள தொழில்நுட்ப செயற்றிட்டங்கள், சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் அமுல்படுத்தப்படும் மக்கள் மைய செயற்பணிகள் என்பனவற்றுக்காவுமே இந்த விருது வழங்கப்பட்டது.

உலக உச்சி விருதானது தகவல் சமூகத்தைப் பற்றிய ஐக்கிய நாடுகளின் சபையின் உலகத்தரம் வாய்ந்த முன்னெடுப்புகளில் ஒன்றாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X