Kanagaraj / 2014 டிசெம்பர் 20 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிலையம் 'கெப்லர்' என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதற்கு கே2 மிஷன் என பெயரிடப்பட்டுள்ளது.
அது விண்வெளியில் பறந்து அண்டத்தில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது 'கெப்லர்' விண்கலம் எடுத்து அனுப்பிய புதிய போட்டோக்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது. அதில் பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் விண்வெளியில் இருப்பது தெரியவந்தது.
இதற்கு எச்.ஐ.பி.116454பி என பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியை விட 2½ மடங்கு பெரியதாக உள்ளது. அதன் அருகே சூரியன் உள்ளது. இது பூமியின் சூரியனை விட சிறியதாகவும், குளிர்ச்சியாகவும் உள்ளது.
இந்த சூரியன் மூலமே புதிய கிரகம் வெப்பம் அடைகிறது. அதன் மூலம் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இது பூமியில் இருந்து 180 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. இந்த கிரகம் பூமியை விட 12 மடங்கு நிறை அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
24 minute ago
2 hours ago
3 hours ago