Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மார்ச் 08 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
'செரஸ்' எனும் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நேற்றுமுன்தினம் நுழைந்து நாசாவின் 'டான்' விண்கலம் சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 2011 மற்றும் 2012ஆம் ஆண்டு வெஸ்டா எனும் சிறிய கிரகத்தை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில், செவ்வாய் மற்றும் வியாழன் கிரங்களுக்கு இடையில் பல ஆண்டுகளுக்கு முன்பு 'செரஸ்' எனும் சிறிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2007ஆம் ஆண்டு வெஸ்டா எனும் மற்றொரு சிறிய கிரகம் மற்றும் செரஸ் கிரகம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்காக 'டான்' எனும் விண்கலத்தை ஏவியது.
கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு, சுமார் 490 கோடி கிமீ., தூரத்தைக் கடந்த அந்த விண்கலம், நேற்று முன்தினம் செரஸ் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. அப்போது அது அந்த கிரகத்தில் இருந்து 61 ஆயிரம் கிமீ தொலைவில் இருந்தது.
செரஸ் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த முதல் விண்கலம் என்ற பெயரை மட்டுமல்லாது, விண்வெளியில் உள்ள இரண்டு சிறிய கிரகங்களின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த முதல் விண்கலம் எனும் பெருமையையும் 'டான்' பெற்றுள்ளது.
கடந்த 2011 மற்றும் 2012ஆம் ஆண்டு வெஸ்டா எனும் சிறிய கிரகத்தை அடைந்தது. அதற்குப் பிறகு, தற்போது செரஸ் கிரகத்தை அடைந்துள்ளது. இனி அடுத்த 16 மாதங்கள் அங்கிருந்தபடியே அந்த கிரகத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்பவுள்ளது.
அவற்றைக் கொண்டு செரஸ் கிரகம் எவ்வாறு தோன்றியது, அதன் மேற்பரப்பு எப்படியெல்லாம் மாற்றத்துக்கு உள்ளாகிறது என்பவை குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆராயவுள்ளனர்.
கடந்த 1801ஆம் ஆண்டு இத்தாலிய வானியல் அறிஞரான கிஸெப்பே பியாசி என்பவரால் செரஸ் எனும் சிறிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனில் இருந்து சுமார் 261 கோடி மைல் தூரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago