2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

முகநூல் விவாகரத்து

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகவலைத்தளங்ளின் முடிசூடா மன்னனாக திகழும் முகநூல், அதன் வாடிக்கையாளர்களுக்கு எப்படியெல்லாம் உதவமுடியுமோ, அப்படியெல்லாம் உதவுகின்றது.

ஏன் தம்பதிகளுக்கிடையில் விவாகரத்தை கூட பெற்றுக்கொடுக்கின்றது. ஆச்சரியம் தான், ஆனால் உண்மை.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மன்ஹாட்டனைச் சேர்ந்தவர் விக்டர் சேனா பிளட் சராகுவுக்கும் அவரது மனைவி லெனோரா பைடூவுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் அடிக்கடி முரண்பட்டார்கள். இதனால், மன்ஹாட்டனின் நீதிமன்றத்தில் தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரி மனுவொன்றையும் தாக்கல் செய்தனர்.

இதன்பின்னர் இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்து வந்துள்ளனர்.

எந்த விடயமானாலும் நேரில் சந்திக்காமல் அலைபேசி மூலமாக பேசி வந்துள்ளார்கள். இதன்போது, விக்டர் சேனா தனது வீட்டை விட்டுவிட்டு வேறு இடத்துக்கு சென்றுள்ளார். 

இதனால், அவருக்கு முகநூல் மூலம் அழைப்பாணை அனுப்பும் படி நீதிமன்றத்தில் மனைவி பைடூ மனு கொடுத்துள்ளார். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. 

இதன் பின்னர் முகநூல் மூலம் இருவரும் விவாகரத்து தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதியும் வழக்கு தொடர்ந்த லெனோரா பைடூவுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.

இதன் மூலம் முகநூல் வழியாக விவாகரத்து பெற்ற முதல் அமெரிக்க பெண் என்ற பெருமையை லெனோரா பைடூ பெற்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X